இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
2021-04-07 18:54:25

இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதம் 4 விழுக்காடு என்ற நிலையில் இருப்பதாகவும், தளர்ச்சியான நாணயக் கொள்கையை நிலைநிறுத்தும் நிலைப்பாடு மாறாது என்றும் இந்திய மத்திய வங்கி 7ஆம் நாள் தெரிவித்தது.

இந்திய மத்திய வங்கி ஏப்ரல் 5 முதல் 7ஆம் நாள் வரை நடப்பு நிதியாண்டிற்கான முதலாவது இருமாதங்கள் நாணயக் கொள்கை கூட்டம் நடத்தி, இம்முடிவை எடுத்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 விழுக்காட்டை எட்டும் என்ற மதிப்பீட்டை இந்திய மத்திய வங்கி மாற்றவில்லை.