புது தில்லியில் ஊரடங்கு சட்டம்
2021-04-07 16:23:52

புதிய ரக கரோனா வைரஸ் பரவல் வேகத்தை விரைவாகக் கட்டுப்படுத்தும் வகையில், ஏப்ரல் 30ஆம் நாள் வரை, இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நாள்தோறும் இரவு 10 மணிமுதல்  விடியற்காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று இந்திய அரசு உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 6ஆம் நாள் அறிவித்தது.

ஊரடங்கு சட்டக் காலத்தில் அத்தியாவசியச் சேவைகளை வழங்கும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். அதுபோன்றே அவசர காரணங்களுக்காக மட்டுமே வாகனங்களை இயக்க முடியும் என்று இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.