அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்துக்கு சீன வளர்ச்சி வங்கி ஆதரவு
2021-04-07 17:09:59

அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்துக்கு நிதி ஆதரவை அதிகரிக்கும் விதம், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் அடிப்படை ஆய்வுக்கான சிறப்புக் கடனை சீன வளர்ச்சி வங்கி அண்மையில் உருவாக்கியுள்ளது. 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் இத்தகைய சிறப்புக் கடனாக மொத்தம் 30 ஆயிரம் கோடி யுவான் வழங்கப்படும். இதில் 5000 கோடி யுவான் 2021ஆம் ஆண்டில் வழங்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது.

தொலைநோக்கு வாய்ந்த அறிவியல் திட்டம் மற்றும் திட்டப்பணிகளின் நடைமுறையாக்கம், தொழில் மற்றும் ஆய்வின் ஆழமான ஒன்றிணைப்பு, அறிவியல் தொழில் நுட்பச் சாதனையின் மாற்றம் மற்றும் தொழில்மயமாக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இக்கடன் தொகை முக்கியமாகப் பயன்படுத்தப்படும் என்று சீன வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.