சீன-ஐரோப்பிய உறவு பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்து
2021-04-07 19:14:00

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அழைப்பை ஏற்று ஏப்ரல் 7ஆம் நாள், ஜெர்மனி தலைமையமைச்சர் ஏஞ்சலோ மெர்க்கெல் அம்மையாருடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த ஆண்டு, நாம்  பலமுறை தொடர்பு கொண்டது, சீன-ஜெர்மனி மற்றும் சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சியை வழிகாட்டியுள்ளது. ஜெர்மனி மற்றும் ஐரோப்பா, சீனாவுடன் இணைந்து கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு, சீன-ஜெர்மனி மற்றும் சீன ஐரோப்பிய உறவின் சீரான வளர்ச்சியைப் பேணிக்காத்து முன்னேற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பியத் தரப்புடன் இணைந்து, அடுத்த கட்டத்திலுள்ள முக்கிய அரசியல் நிகழ்ச்சி நிரலைச் செவ்வனே செயல்படுத்தி, பல்வேறு துறைகளில் பயன்தரும் ஒத்துழைப்புகளை விரிவாக்கி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலக மேலாண்மை விவகாரங்களில் தொடர்புகளை வலுப்படுத்தி, பலதரப்புவாதத்தைக் கூட்டாகச் செயல்படுத்த சீனா விரும்புகிறது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.