ஜி 20 குழுமத்தின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் இரண்டாவது கூட்டம்
2021-04-08 10:01:53

மத்திய ஐரோப்பிய நேரப்படி ஏப்ரல் 7ஆம் நாள், ஜி 20 குழுமத்தின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் இரண்டாவது கூட்டம் காணொலி வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான இத்தாலி தலைமை தாங்கியது. புதிய ரக கரோனா வைரஸ் பரவலின் சூழ்நிலையில், சர்வதேசச் சமூகம், பொருளாதார மீட்சியையும் தொடரவல்ல வளர்ச்சியையும் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்றும் பலவீனமான நாடுகளுக்கான ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி 20 குழுமத்தின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி தலைவர்களின் மூன்றாவது கூட்டம் ஜூலை 9ஆம் மற்றும் 10ஆம் நாட்களில் இத்தாலியின் வெனிஸில் நடைபெறவுள்ளது என்று தெரிய வருகின்றது.