சீனாவின் நான்கு பெரிய வர்த்தக கூட்டாளிகள்
2021-04-13 18:41:30

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் பற்றி சீனச் சுங்க துறை தலைமை பணியகம் 13ஆம் நாள் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, ஆசியான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான், சீனாவின் நான்கு பெரிய வர்த்தக கூட்டாளிகளாகும். சீனா மற்றும் அவற்றுடனான மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட முறையே 26.1 விழுக்காடு, 36.4 விழுக்காடு, 61.3 விழுக்காடு மற்றும் 20.8 விழுக்காடு அதிகமாகும்.

தவிர, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகளுடனும் RCEP எனும் மண்டல பன்முக பொருளாதார கூட்டாளியுறவு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளுடனும் சீனாவின் வர்த்தகத் தொகை, முறையே 21.4 விழுக்காடு மற்றும் 22.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.