தொழில்முறைக் கல்வி பற்றி ஷிச்சின்பிங் மற்றும் லிக்கெச்சியாங்கின் கருத்து
2021-04-13 16:04:18

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் தொழில்முறைக் கல்விப் பணி பற்றி முக்கிய உத்தரவு இட்டார். அவர் கூறுகையில், சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைக்கும் புதிய போக்கில், தொழில்முறைக் கல்வி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நவீனத் தொழில்முறைக் கல்வி அமைப்புமுறையை விரைவாக உருவாக்கி, மேலும் அதிகமான உயர்தர அறிவைக் கொண்ட தொழில் நுட்ப திறமைசாலிகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் கூறுகையில், தொழில்முறைக் கல்வி தொழில் நுட்பத் திறமைசாலிகளுக்கு பயிற்றுவித்து, வேலை வாய்ப்பு அதிகரிப்பு தொழில் நடத்தல் மற்றும் புத்தாக்கத்தை விரைவுபடுத்தி, சீன தயாரிப்பு மற்றும் சேவை நிலைமையை முன்னேற்றும் முக்கிய அடிப்படையாகும் என்று சுட்டிக்காட்டினார்.