சீன விண்கலன் பெயர் பற்றி புராணக் கதை
2021-04-29 19:37:58

சீன விண்கலன் பெயர் பற்றி புராணக் கதை_fororder_天河号工程文件-(1)

சீன விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த மிகவும் முக்கிய பகுதியான தியன்ஹெ(சீனம்:天和) எனும் வின்கலன் இன்று வியாழக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சீன மொழியில் “தியன்”(சீனம்:天) என்ற சொல்லுக்கு தமிழில் வான் என பொருள். ஹெ(சீனம்:和)என்ற சொல்லுக்கு தமிழில் இணக்கம் அல்லது  இசைவு என பொருள். வான்-பூமி இடையேயான இணக்கம், வான்-மனிதன் ஒன்றாகச் சேர்வது போன்ற அருமையான விருப்பங்களை தியன்ஹெ என்ற வார்த்தை வெளிக்காட்டுகிறது.  மேலும், வான்-பூமி-மனிதன் இடையேயான ஒருங்கிசைவு, சீனப் பண்டைய காலத்தில் தத்துவத்தின் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.