சீன-மத்தியக் கிழக்கு ஐரோப்பிய நாட்டுப் பொருட்காட்சிக்கான ஷிச்சின்பிங்கின் வாழ்த்துக் கடிதம்
2021-06-08 18:39:45

ஜூன் 8ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2ஆவது சீன-மத்தியக் கிழக்கு ஐரோப்பிய நாட்டுப் பொருட்காட்சிக்கு வாழ்த்துக் கடிதத்தை அனுப்பினார்.

இக்கடிதத்தில் அவர் கூறுகையில், இந்தப் பொருட்காட்சி நடைபெறுவது, மத்தியக் கிழக்கு ஐரோப்பிய வணிகப் பொருட்களுக்கான சீன சந்தையின் புரிந்துணர்வை அதிகரிப்பது, சீனாவுக்கு மத்தியக் கிழக்கு நாடுகளின் ஏற்றுமதியை விரிவாக்குவது, கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட அறைகூவலைச் சமாளித்து, பொருளாதார மீட்சியை முன்னேற்றுவது ஆகியவற்றுக்குத் துணை புரியும். பல்வேறு தரப்புகள் இதை வாய்ப்பாகக் கொண்டு, ஒத்துழைப்பு உள்ளார்ந்த ஆற்றலை இடைவிடாமல் வெளிகொளர்ந்து, மேலும் அதிக ஒத்துழைப்பு வாய்ப்புகளைக் கூட்டாக கண்டறிய விரும்புகிறேன் என்று வலியுறுத்தினார்.