ஹாய் பெய் சோவில் ஷிச்சின்பிங் ஆய்வுப் பயணம்!
2021-06-08 21:39:50

ஹாய் பெய் சோவில் ஷிச்சின்பிங் ஆய்வுப் பயணம்!_fororder_06084

ஜுன் 8ஆம் நாள் பிற்பகல் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சிங்காய் மாநிலத்தின் ஹாய் பெய் திபெத் இனத் தன்னாட்சி சோவின் காங் ட்சா மாவட்டத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அவர் சிங்காய் ஏரியின் ஷியன் நவ் வளைகுடாவில் ட்சி லியன் மலை மற்றும் சிங்காய் ஏரி உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு பற்றி கேட்டறிந்த பின், சிங்காய் ஏரி சுற்றுச்சூழல் கட்டுப்பாடு மற்றும் உயிரின பல்வகைத் தன்மை பாதுகாப்பு பற்றிய பயன்களை நேரடியாக அறிந்து கொண்டார்.

பின்னர் அவர் ஷா லியு ஹே வட்டத்தின் ஒரு கிராமத்தில் திபெத்தின மக்களைச் சந்தித்து, உள்ளூர்வாசிகளின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலையை பற்றி அறிந்து கொண்டார்.