சீன அரசுத் தலைவரின் சிங் ஹெய் மாநிலப் பயணம்
2021-06-09 17:23:15

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் சீனாவின் சிங் ஹெய் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

9ஆம் நாள் காலை, சீன கம்யூனிஸ்ட் கட்சி சிங் ஹெய் மாநில கமிட்டி மற்றும் சிங் ஹெய் மாநில அரசின் பணியறிக்கையை ஷி ச்சின்பிங் கேட்டறிந்தார். சிங் ஹெய் மாநிலத்தின் பல்வேறு துறைகளிலான பணிகளை அவர் பாராட்டினார். சிங் ஹெய் மாநிலத்தின் பல்வேறு தேசிய இன அதிகாரிகளும், பொது மக்களும் கூட்டாக முயற்சி செய்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவை கொண்டாட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சிங் ஹெய் மாநிலத்தின் இயற்கைச் சூழலைப் பேணிக்காப்பது சீனாவின் முக்கியமான பணியாகும். தூய்மையான சூழல் செல்வமாகும் என்ற கருத்தை ஆழமாக்கி, சிங்ஹெய்-திபெத் பீடபூமியை சரியாக பாதுகாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.