ஐ.நா.தலைமைச் செயலாளர் பதவிக்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்ட குட்டரேஸ்
2021-06-09 12:58:30

ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்காக அன்டோனியோ குட்டரேஸ் பரிந்துரைத்ததை ஐ.நா பாதுகாப்பவையின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஜுன் 8-ஆம் நாள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளன.

ஜ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்ற குட்டரேஸ் 2ஆவது முறையாக அந்தப் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவரது புதிய பதவிக்காலம், 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தொடங்கி 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் நாளுடன் நிறைவடையும்.

ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ட்சங் ஜுன் கூறுகையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்குக் குட்டரேஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டதைச் சீனா ஆதரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, தொடரவல்ல வளர்ச்சி, தொற்று நோயை எதிர்க்கும் சர்வதேச ஒத்துழைப்பு முதலிய துறைகளில் ஆக்கப்பூர்வமாக பங்காற்றி வரும் ஐ.நாவுக்குத் தலைமைத் தாங்கியிருக்கும் குட்டரேஸுக்குப் பாராட்டும் தெரிவித்தார்.

ஐ.நா. சாசனத்தின்படி, குட்டரேஸ் தொடர்ந்து ஐ.நா. பொதுச் செயலாளராகப் பதவி ஏற்பது, ஐ.நா.பேரவையின் தீர்மானம் வழியாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும்.