கோவிட்-19 நோய் தொற்றால் குழந்தைகளுக்குக் கடும் பாதிப்பு இல்லை:இந்தியா ஆய்வு
2021-06-09 14:33:09

இந்தியாவின் பிரதான சுகாதார நிறுவனமான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் இயக்குநர் ரான்டீப் குலேரியா செவ்வாய்கிழமை கூறுகையில், கோவிட்-19 நோய் தொற்றால் குழந்தைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என கருதவில்லை. குழந்தைகளுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான சான்று அல்லது தரவு இல்லை என்று தெரிவித்தார்.

நோயுற்ற நிலையில் இருந்த குழந்தைகளைத் தவிர்த்து, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் மருத்துவமனையில் சேராமல் குணமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் தற்போது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.