ஏபெக்கின் எண்ணியல் வறுமை ஒழிப்புக் கருத்தரங்கு தொடக்கம்
2021-06-09 16:40:02

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 27ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது கூறுகையில், சீனா நடத்தும் எண்ணியல் வறுமை ஒழிப்புக் கருத்தரங்கு, எண்ணியல் தொழில் நுட்பத்தின் மேம்பாட்டை வெளிக்கொணர்ந்து, ஆசிய-பசிபிக் பிரதேசம் வறுமை ஒழிப்பு இலட்சியத்தை மேற்கொள்ள உதவி செய்யும் என்று கூறினார். சீன தேசிய இணையத் தளத் தகவல் அலுவலகம், சீன வெளியுறவு அமைச்சகம், குய்சோ மாநில அரசு ஆகியவை கூட்டாக இக்கருத்தை நடைமுறைப்படுத்தி, ஜூன் 8,9ஆம் நாட்களில் குய்யாங் நகரில் ஆங் லைன் மற்றும் ஆஃப் லைன் மூலம் இக்கருத்தரங்கை நடத்தின.

இக்கருத்தரங்கில் சிறப்பு தலைப்புகள் பற்றிய 3 விவாதங்கள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட விருந்தினர்கள் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வமைப்பின் செயலகம் மற்றும் மலேசியா, ரஷியா, தாய்லாந்து முதலிய உறுப்பு நாடுகள், உலகப் பொருளாதார மன்றம், அமெரிக்க-சீன வர்த்தக ஆணையம் முதலிய தொடர்புடைய சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.