எதிர்காலம் மேலும் அருமையாக இருக்கும்: ஷிச்சின்பிங்
2021-06-09 11:04:19

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 8ஆம் நாள் மாலை சீனாவின் சின்காய் மாநிலத்திலுள்ள கோலோஸாகொங்மா எனும் ஊரில் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கு கிராமவாசிகளைச் சந்தித்த அவர், நாம் ஒரே குடும்பம். நாம் அனைவரும்  சகோதரி சகோதரனாக இருக்கிறோம் என்றார். மேலும்,  நவ சீன நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவின் போது, ஒற்றுமையுடன் கூடிய சீனத் தேசத்தின் எதிர்காலம் மேலும் அருமையாக இருக்குமெனக் குறிப்பிட்டார்.

திபெத் இனத்தின் ஆயர் ஊரான கோலோஸாகொங்மாவில் சுமார் 2400 கிராமவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.  2017ஆம் ஆண்டில் இந்த ஊர் முற்றிலுமாக வறுமையிலிருந்து விடுபட்டது குறிப்பிடதக்கது.