2021 ஆம் ஆண்டுக்கான சீன - ஐரோப்பிய மனித உரிமைக் கருத்தரங்கு
2021-06-09 10:14:12

2021ஆம் ஆண்டுக்கான சீன-ஐரோப்பிய மனித உரிமைக் கருத்தரங்கு சீனாவின் சொங்ச்சிங் நகரிலும் இத்தாலியின் ரோம் நகரிலும் 8ஆம் நாள் நடைபெற்றது. கரோனா பரவல் மற்றும் உயிரின் ஆரோக்கிய உரிமைக்கான காப்புறுதி என்பது நடப்பு கருத்தரங்கின் தலைப்பாகும். சீனாவில் பரவிய கரோனா பரவலைச் சீனா பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தி மக்களின் உயிர் மற்றும் ஆரோக்கிய உரிமைகளை உத்தரவாதம் செய்ததோடு, மனிதகுலத்தின் சுகாதார மற்றும் ஆரோக்கியத்துக்கான பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவதையும் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றியுள்ளது. இதனிடையில், இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட இத்தாலியின் பல்வேறு துறையினர்கள், உலகின் கரோனா பரவல் தடுப்பில் சீனா பங்காற்றியுள்ளதாகக் கருத்து தெரிவித்தனர்.