லன்சங் மெய்கொங் ஆறு ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர் கூட்டம்
2021-06-09 10:41:38

லன்சங் மெய்கொங் ஆறு ஒத்துழைப்பின் 6ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 8ஆம் நாள் சொங்ச்சிங் மாநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீனா, மியன்மார், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

லன்சங் மெய்கொங் ஆறு ஒத்துழைப்பானது 6 நாடுகள் உருவாக்கிய புதிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பு முறையாகும். கடந்த 5 ஆண்டுகளில், இவ்வமைப்பு முறை உயர்வேகமாக வளர்ந்து, பல சாதனைகளைப் பெற்றுள்ளதாகச் சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ கூறினார்.

மேலும், தொடர்புடய நாடுகளுடன் இணைந்து, சீனா தொற்று நோய் தடுப்பு ஒத்துழைப்பை ஆழமாக்குதல், பொருளாதார மீட்சியை வற்புறுத்துதல், நீர் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், பிரதேச யதார்த்த ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், அரசு சாரா நட்புத் தொடர்பை வற்புறுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு அமைப்பு முறையை முழுமைப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.