சீனாவில் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு
2021-06-10 12:17:22

14வது ஐந்தாண்டுத் திட்டவரைவுக் காலத்தில் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு திட்டத்தைச் சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா துறை அண்மையில் வெளியிட்டது. பல்வேறு தேசிய இனங்கள், பிரதேசங்கள், தொழில் துறைகள் ஆகியவற்றின் தனிச்சிறப்புகள் கொண்ட பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான 20 தேசிய நிலை அரங்குகள் உருவாக்கப்படும் என்று இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வம் பணிமனைகளின் கட்டுமானத்தைப் பயன்படுத்தி, கிராமப்புற வளர்ச்சியை முன்னேற்றி, பொருளாதார மற்றும் சமூகத்தின் தொடர்வல்ல வளர்ச்சியில் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு மற்றும் பரவல் மேலும் மேலதிக பங்காற்றச் செய்ய வேண்டும் என்றும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.