அமெரிக்காவில் விரைவில் காலாவதியாக உள்ள கரோனா தடுப்பூசிகள்
2021-06-10 16:19:59

அமெரிக்காவின் செய்தி ஊடகங்கள் ஜூன் 9ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவில் ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் உற்பத்தி செய்த பல பத்து லட்சக்கணக்கான கரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல், அவற்றில் சில தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகும் நிலையில் உள்ளன. அத்தடுப்பூசிகளை மீண்டும் வங்கீடு செய்யுமாறு அந்நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் அமெரிக்க பெடரல் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், ஏனைய தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஊடகங்கள் ஆலோசித்துள்ளன.

ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசிகளின் வினியோகத்தை நிறுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏப்ரல் திங்கள் அறிவித்தது. அது மக்கள் மத்தியில் இத்தடுப்பூசிகளின் மீதான கவலையை ஏற்படுத்தியது.