ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு
2021-06-10 10:42:05

ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இடையே நடந்த கலந்தாய்வுக்குப் பிறகு கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கடல் தொடர்பான சீனாவின் கருத்து மற்றும் செயல்களை எதிர்ப்பதாகத் தெரிவித்ததோடு, சின்ஜியாங் உய்கூர் இன மக்களின் மனித உரிமை மற்றும் ஹாங்காங்கின் ஜனநாயக முறைமை மீதும் கவனம் செலுத்தினர். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் சொடர்பாளர் வாங் வென்பின் 9ஆம் நாள் கூறுகையில், தென் சீனக் கடலிலுள்ள தீவுகள், அதன் அருகிலுள்ள கடற்பரப்பு, தியாவ்யூ தீவு மற்றும் அதனைச் சேர்ந்த தீவுகள் ஆகியவற்றின் மீதான அரசுரிமை சீனாவுக்குரியது. சின்ஜியாங் மற்றும் ஹாங்காங் தொடர்பான பிரச்சினை, சீனாவின் உள்விவகாரம். இதில் எந்த வெளிநாட்டின் தலையீட்டையும் அனுமதிக்காது. நாட்டின் அரசுரிமை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன் ஆகியவற்றை பேணிக்காக்கும் மன உறுதி மாறாது. ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவுக்கான அடிப்படை விதியைப் பின்பற்றி, சீன உள் விவகாரத்தில் தலையிடும் செயலையும், பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் செயலையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.