இவ்வாண்டின் முதல் ஐந்து திங்களில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை
2021-06-10 18:48:25

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி இவ்வாண்டின் முதல் ஐந்து திங்களில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் அதிகரித்து வரும் போக்கினை நிலைநிறுத்தியுள்ளது. இக்காலத்தில் சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 147 கோடியே 60 லட்சம் யுவானாகும். வரலாற்றில் இது மிக உயர்ந்த பதிவாகும்.

முக்கிய வர்த்தக கூட்டாளிகளுக்கான சீனாவின் ஏற்றுமதி தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஆசியான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சீனாவின் ஏற்றுமதித்தொகை முறையே 38.9 விழுக்காடு, 29.3 விழுக்காடு மற்றும் 27.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.