மனிதருடன் விண்வெளியை அடையவுள்ள ஷென் சோ-12 விண்கலம்
2021-06-10 10:47:20

மனிதருடன் விண்வெளியை அடையவுள்ள ஷென் சோ-12 விண்கலம்_fororder_827788673

பெய்ஜிங் நேரப்படி 2021ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாள், மனிதரை ஏற்றிச்செல்லும் ஷென்சோ-12 விண்கலம் ஏவு பகுதியைச் சென்றடைந்தது என்று மனிதரை ஏற்றிச்செல்வதற்கான சீன விண்வெளி பொறியியல் அலுவலகம் கூறியுள்ளது.

தற்போது, ஏவு தளத்திலுள்ள அனைத்து வசதிகளும் நல்ல நிலையில் உள்ளன. தொடர்புடைய செயல்பாட்டு ஆய்வுகளும், கூட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. ஷென்சோ-12 மூலம், 3 விண்வெளிவீரர்கள் விண்வெளி நிலையத்துக்குச் சென்று 3 மாதங்கள் வேலை செய்வார்கள் என்று தெரிகிறது.