சீன–அமெரிக்க வணிக அமைச்சர்களிடைய தொலைப்பேசி உரையாடல்
2021-06-10 10:40:25

சீன வணிக அமைச்சர் வாங் வென்டாவும், அமெரிக்க வணிக அமைச்சர் ஜினா எம். ரேய்மண்டோவும் 10ஆம் நாள் வியாழக்கிழமை தொலைப்பேசியில் உரையாடினர். அப்போது,  இரு நாட்டு வணிகத் துறை விவகாரங்கள் மற்றும் கவலைகள் ஆகியவை குறித்து இரு தரப்பினரும் வெளிப்படையாகவும் நடைமுறைக்கு ஏற்ற வழியிலும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சீன மற்றும் அமெரிக்க வணிகத் துறைகளிடையேயான பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள இரு தரப்பினரும்,  வர்த்தகம் மற்றும் முதலீட்டிலான நடைமுறை ஒத்துழைப்பு சீராக வளர்வதை முன்னெடுத்து, உரிய முறையில் கருத்து வேறுபாடுகளைக் களைய ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், தொடர்ந்து பணித் தொடர்புகளை நிலைநிறுத்தவும் இரு தரப்புகளும் உடன்பட்டுள்ளன.