ஹைனான் தாராள வர்த்தகத் துறைமுகம் உள்ளிட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் – சீனா
2021-06-11 10:39:19

ஹைனான் தாராள வர்த்தகத் துறைமுகம், வெளிநாட்டு தடை எதிர்ப்பு உள்ளிட்ட சட்டங்கள், சீனாவின் உச்சநிலை சட்ட மன்றமான தேசிய மக்கள் பேரவையின் நிலைக்குழுவில் வியாழக்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இந்த சட்டங்களை வெளியிடுவதற்கான உத்தரவுகளில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கையெழுத்திட்டார்.

10ஆம் நாள் மாலை பெய்ஜிங்கில் நிறைவுபெற்ற 13ஆவது தேசிய மக்கள் பேவரையின் நிலைக்குழுவின் 29ஆவது கூட்டத்தில்,  தரவுப் பாதுகாப்பு, ஹைனான் தாராள வர்த்தக துறைமுகம், ராணுவ வீரர்களின் தகுநிலை, உரிமைகள் மற்றும் நலன்களின் பாதுகாப்பு,  ராணுவ வசதி பாதுகாப்புச் சட்டத் திருத்தம், பணியிடங்களின் பாதுகாப்பு, முத்திரை வரி, வெளிநாட்டுத் தடை எதிர்ப்பு ஆகியவை தொடர்பான சட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.