உலக நாடுகளின் நாகரிகங்களிடையேயான பரிமாற்றங்களை அதிகரிக்க ஷிச்சின்பிங் கருத்து
2021-06-11 15:57:08

கடந்த சில ஆண்டுகளில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல இடங்களில், நாகரிகங்களின் பல்வகைத் தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போது,   பல்வேறு நாடுகளின் நாகரிகங்களிடையேயான பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

உலக நாகரிகங்களைப் பார்ப்பதில், சீனாவின் அதியுயர் தலைவர் எப்போதும் திறப்பு மன்பான்மையைப் பின்பற்றி வருகிறார். இதனிடையில் ஷிச்சின்பிங் பேசுகையில்

பண்டைய காலம் முதல், சீனத் தேசம்,  “யாதும் ஊரே யாவரும் கேளிர்” போன்ற சிந்தனையுடன், உலகின் பிற தேசங்களுடன் தொடர்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய திறந்த சிந்தனை உள்ளதாலே, மனித வரலாற்றில் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக துண்டிப்பின்றி நீடித்து வரும் ஒளிமிக்க நாகரிகமாக சீனத் தேசம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு மே திங்கள், ஷாங்காயில் நடைபெற்ற வெளிநாட்டு நிபுணர்கள் உரையாடல் கூட்டத்தில் பேசுகையில்,

சீனா எப்போதும் உலகின் பல்வேறு நாடுகளிடம் கற்றுக் கொள்ளும் நாடாகி வருகிறது.  மேலும் திறந்த மனதுடன் நடந்து கொண்டு, உலக நாடுகளிடையே  பரஸ்பர கற்றலையும் பரிமாற்றத்தையும் அதிகரிக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.