தமிழகத்தில் 4 மாவட்டத்தில் கனத்த மழைக்கு வாய்ப்பு
2021-06-14 18:50:45

தமிழகத்தின் நீலகரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் நீலகிரி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.