லித்தியன் மின்கலத் தயாரிப்பில் இந்திய நிறுவனம்
2021-06-15 15:26:57

லித்தியம் மின்கலம், மின்னணு வாகன மின்னேற்றி, ஆற்றல் சேமிப்பக முறைமை, நவீன வீட்டு ஆற்றல் உபகரணங்கள் மற்றும் அது தொடர்பான தயாரிப்புகளில் ஈடுபட உள்ளதாக இந்தியாவின் மிகப் பெரிய மின்கலத் தயாரிப்பு நிறுவனமான அமர ராஜா பேட்டரிஸ் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பத்தில் எதிர்காலத்தில் லித்தியம் முக்கியப் பங்கு வகிக்கும். பல புதிய வாய்ப்புகளை அது தோற்றுவிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசோக் லைலாண்ட், ஃபோர்ட் இந்தியா, ஹோண்டா, ஹுண்டாய், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, மாருதி சுசுகி மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தானியங்கி மின்கலங்களை இந்நிறுவனம் விநியோகித்து வருகின்றது. லித்தியன் மின்கலன் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சிறப்புச சலுகைகள் அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.