அமெரிக்க-துருக்கி அரசுத் தலைவர்களின் சந்திப்பு
2021-06-15 15:18:48

நேட்டோ உச்சி மாநாடு 14ஆம் நாள் பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் நடைபெற்றது. அன்று அமெரிக்க அரசுத் தலைவர் பைடனும் துருக்கி அரசுத் தலைவர் எர்டோகனும் சந்திப்பு நடத்தினர். இச்சந்திப்பு பயன் மிக்கது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இரு நாட்டுறவை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகள் பற்றி அவர்கள் தெரிவிக்கவில்லை.

பைடன் அரசுத் தலைவராக பதவி ஏற்ற பின், எர்டோகனுடன் சந்திப்பு நடத்துவது இதுவே முதன்முறையாகும்.

துருக்கியும் அமெரிக்காவும் நேட்டோவின் உறுப்பு நாடுகளாகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இரு நாட்டுறவு பதற்ற நிலையில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.