வளரும் நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசிகளை நன்கொடையாக அளிக்கும் சீனா
2021-09-11 19:30:58

கோவாக்ஸ் திட்டத்துக்கு 10 கோடி அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ள நிலையில், இவ்வாண்டுக்குள் வளரும் நாடுகளுக்கு கூடுதலாக 10 கோடி கோவிட்-19 தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கவும் சீனா முடிவெடுத்துள்ளது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 9ஆம் நாளிரவு காணொலி வழியாக, பிரிக்ஸ் அமைப்பின்  தலைவர்களிடையே 13ஆவது சந்திப்பில் பங்கேற்ற போது இந்த முடிவை அறிவித்தார்.

தற்போது வரை,  100க்கும் அதிகமான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு சீனா 100 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இவ்வாண்டுக்குள் 200 கோடி தடுப்பூசிகளை விநியோகம் செய்ய சீனா பாடுபடும்.