எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு ஷிச்சின்பிங் ஊக்கம்
2021-09-13 20:33:23

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் பீடபூமிப் பகுதியிலுள்ள சீன மக்கள் விடுதலைப் படையின் முன்மாதிரியான படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அனைவருக்கும் பதில் கடிதம் அனுப்பி, அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

எல்லைப் பாதுகாப்பில் ஊன்றி நிற்கும் படைவீரர்கள் கடினமான கடமை மற்றும் பெரிய பொறுப்புகளை ஏற்கின்றனர். படை வீரர்கள், எல்லையைப் பாதுகாத்து, கட்சி மற்றும் மக்களுக்காக புதிய பங்களிப்புகளை ஆற்ற வேண்டுமென ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.