ஆப்கான் அப்பாவி மக்களைக் கொன்ற தவற்றுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும்: பன்னாட்டுக் கருத்து
2021-09-14 17:29:38

அமெரிக்க ராணுவப் படையினர் ஆப்கானிஸ்தானின் அப்பாவி மக்களைக் கொன்ற செய்தி அண்மையில், ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும் என்ற பன்னாட்டுக் கருத்து எழுந்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சௌலீஜன் 14ஆம் நாள் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 29ஆம் நாள் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 10 அப்பாவி மக்களே கொல்லப்பட்டனர். இது முற்றிலும் தவறான உளவுத் தகவல் ஏற்பட்ட விளைவாகும் என்று என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் புலனாய்வுக்குப் பிறகு அறிவித்தன.

இந்த சம்பவத்தின் உண்மையை முழுமையாகப் புலனாய்வு செய்ய வேண்டும். ஆப்கான் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அமெரிக்கா பொறுப்பான பதிலை அளிக்க வேண்டும் என்று சௌலீஜன் தெரிவித்தார்.