பல தரப்பட்ட உலகத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும்
2021-09-14 16:02:42

மலேசிய பல்கலைக்கழகத்தின் சீனா ஆய்வு கூடத் துணை தலைவர் பீட்டர் அண்மையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், பிற நாடுகளுக்கு ஜனநாயகக் கருத்தைக் கட்டாயமாகப் புகுத்தி வரும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகள் வெளியேறிய உடன் சவாலை எதிர்கொண்டுள்ளது என்று  தெரிவித்தார்.

உலகளவில் அமெரிக்கா மட்டுமே ஒரே ஒரு தலைசிறந்த நாடு அல்ல. பல துருவ ஒழுங்குகளின் அடிப்படையில், அமெரிக்கா, சீனாவின் நிர்வாக அமைப்பு முறைமையை ஏற்றுக்கொண்டு, சீனாவுடன் அமைதியாகப் பழக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.