சீன மற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
2021-09-14 14:08:22

உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 13ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தையின் போது, சீனா, சிங்கப்பூருடன் இணைந்து நெடுநோக்குத் தொடர்பை வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இன்னல்களைச் சமாளித்து, கரோனா வைரஸ் பரவலைத் தடுத்து, பிரதேசம் மற்றும் உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற விரும்புவதாகத் தெரிவித்த வாங்யீ, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து புதிய இயக்கு ஆற்றலைக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்குச் சீனா வழங்கிய தடுப்பூசிகளுக்கு நன்றி தெரிவித்த விவியன் பாலகிருஷ்ணன் கரோனா வைரஸ் தடுப்பு, வர்த்தகம், முதலீடு, எண்ணியல் பொருளாதாரம் முதலிய துறைசார் ஒத்துழைப்புகளை சீனாவுடன் வலுப்படுத்த சிங்கப்பூர் ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.