சீன-அமெரிக்கக் கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை
2021-09-14 10:59:01

சீன-அமெரிக்கக் கட்சிகளுக்கிடையிலான 12ஆவது பேச்சுவார்த்தை 13ஆம் நாள் காணொலி வழியாக நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சர்வதேசத் தொடர்புத் துறை, அமெரிக்க ஜனநாயகக் கட்சி, அமெரிக்க குடியரசுக் கட்சி ஆகியவை இப்பேச்சுவார்த்தையை நடத்தின.

இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சர்வதேசத் தொடர்பு துறை அமைச்சர் சுங் தாவ் கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துகளை நடைமுறைப்படுத்தி, இரு நாட்டுறவு சரியான பாதைக்குத் திரும்புவதற்குரிய நிபந்தனைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

அமெரிக்க ஜனநாயக கட்சியின் பிரதிநிதி டியான்னும், அமெரிக்க குடியரசுக் கட்சியின் பிரதிநிதி ஹில்ஸும் கூறுகையில், இரு நாட்டு கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை இரு நாட்டுறவின் முக்கியப் பகுதியாகும். இரு நாடுகளும், உயர் நிலை பேச்சுவார்த்தையை அதிகமாக நடத்தி, உலக அறைகூவல்களைக் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்றனர்.