ஆப்கானிஸ்தானின் அமைதி புனரமைப்புக்குச் சீனா ஆதரவு
2021-09-14 10:37:04

உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 13ஆம் நாள், ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ், ஜெனீவாவில், ஆப்கானிஸ்தான் மனித நேய நிலைமைக்கான உயர் நிலை அமைச்சர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இதில், ஐ.நாவின் ஜெனீவா மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள பிற அமைப்புகளுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி சென் சூ உரைநிகழ்த்தினார்.

தன்னுடைய உரையில், மனித நேய நெருக்கடியைத் தணிவு செய்து, நிதானமான ஒப்படைப்பை வெகுவிரைவில் நனவாக்கி, அமைதி வளர்ச்சிப் பாதையில் ஆப்கானிஸ்தான் நடைபோடுவதில் ஐ.நா முக்கிய பங்காற்றுவதற்கு சீனா ஆதரவளிப்பதாகத் தெரிவித்த சென் சூ, ஆப்கானிஸ்தானுக்கு 20 கோடி யுவான் மதிப்புள்ள உணவுகள், தடுப்பூசிகள், மருந்துகள் முதலியவற்றைச் வழங்க சீனா முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.