சீனாவின் தொழில் வளர்ச்சி அனுபவத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்:பாகிஸ்தான் தலைமை அமைச்சர்
2021-09-14 10:52:50

தொழில் வளர்ச்சி மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கட்டுமானத் துறையில் சீனாவின் வெற்றிகரமான அனுபவத்தை பாகிஸ்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கான் 13ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று, பாகிஸ்தானில் நடைபெற்ற சீனத் தொழில் முனைவோருக்கான முதலீட்டு முன்னேற்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி பேசிய அவர், வணிகச் சூழ்நிலையைப் பாகிஸ்தான் தொடர்ந்து மேம்படுத்தி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மூலம் சீன முதலீட்டை ஈர்த்து, வசதியான முதலீட்டுச் சூழ்நிலைக்கான முன்மாதிரியை உருவாக்க பாகிஸ்தான் முயற்சி செய்யும் என்று தெரிவித்தார்.