அமெரிக்கா – ஜப்பான் – இந்தியா - ஆஸ்திரேலியா தலைவர்களின் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை பற்றிய சீனாவின் கருத்து
2021-09-14 19:14:01

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் அடுத்த வாரம்,  நான்கு தரப்புப் பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.  இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கினை குறிவைப்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் சேர்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லீஜியான் 14ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில்

காலஓட்டத்திறகு புறம்பானதற்கும் பிராந்திய நாடுகளின் விருப்பத்தின் மீறுலுக்கும் மக்களின் ஆதரவு கிடைக்காது.  எந்த ஒத்துழைப்பு முறைமையும், அமைதி மற்றும் வளர்ச்சி என்ற கால ஓட்டத்திற்கு ஏற்றதாகவும், பிராந்திய நாடுகளிடையேயான பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகவும் அமையும். அது, மற்ற தரப்பை குறிவைக்கவும், மற்ற தரப்பின் நலன்களைப் பாதிக்கவும் கூடாது என சீனா எப்போதும் கருதுகிறது என்று குறிப்பிட்டார்.

சில நாடுகள்,  புவிசார் அரசியல் என்ற கருத்தை கைவிட்டு, சீனாவின் வளர்ச்சியை சரியான முறையில் பார்க்க வேண்டும். பிராந்திய நாடுகளின் விருப்பத்தை மதித்து,  பிராந்திய நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கு நன்மை ஏற்படுத்து விதமான செயல்களில் அதிகமாக ஈடுபட வேண்டும் என்றும் ஜாவ் லீஜியான் தெரிவித்தார்.