சீன வேளாண் துறையின் தூய்மையான வளர்ச்சி
2021-09-15 09:54:42

சீன வேளாண் மற்றும் கிராமப்புற அமைச்சகம் உள்ளிட்ட 6 வாரியங்கள், அண்மையில், சீனாவின் 14ஆவது ஐந்தாண்டு வளர்ச்சி திட்டக் காலத்தில் வேளாண் துறையின் தூய்மையான வளர்ச்சி திட்டத்தை வெளியிட்டன. வேளாண் துறையின் தூய்மையான வளர்ச்சி பற்றிய முதல் சிறப்பு திட்டம் இதுவாகும். இத்திட்டம், 14ஆவது ஐந்தாண்டு வளர்ச்சி திட்டத்தில் வேளாண் துறையின் தூய்மையான வளர்ச்சி பணிகளைத் தொகுதியாக வரையறுத்து  இயற்கை சூழல் மேம்பாட்டுக்கும், கிராமப்புற மறுமலர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும்.

இதுகுறித்து, சீன வேளாண் மற்றும் கிராமப்புற அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் கூறுகையில், பொதுவாக, வேளாண் துறையின் தூய்மையான வளர்ச்சி, தொடக்கக் கட்டத்தில் நிறைய இன்னல்களையும் அறைகூவல்களையும் சந்தித்து வருகின்றது. நாங்கள் பாடுபட்டு வேலை செய்து, வேளாண் துறையின் தூய்மையான வளர்ச்சியைப் பெருமளவில் முன்னேற்ற வேண்டும் என்றார்.