28ஆவது பெய்ஜிங் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி
2021-09-15 10:04:31

28ஆவது பெய்ஜிங் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் 14ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. 105 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2200 வணிக நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டன. அவற்றுள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களின் எண்ணிக்கை 57 ஆகும். இக்கண்காட்சியில் உலகளவில் 3 இலட்சம் வகையான சிறந்த புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் கெளரவ விருந்தினர் நாடாகப் பங்கேற்கும் இக்கண்காட்சி, நேரடியாகவும் இணையவழியிலும் நடைபெற்றது.