சிங்கப்பூர் தலைமையமைச்சர் – வாங்யீ சந்திப்பு
2021-09-15 10:12:44

சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்ட சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, செப்டம்பர் 14 ஆம் நாள் அந்நாட்டின் தலைமையமைச்சர் லீ சியன் லூங்கைச் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது, சிங்கப்பூருடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை மேலும் அதிகரித்து, பரிமாற்றத்தை ஆழமாக்கி, பிரதேசங்கள் மற்றும் உலகின் அமைதிக்கும் நிதான மற்றும் வளர்ச்சிக்கும் பங்காற்ற சீனா விரும்புவதாக வாங் யீ தெரிவித்தார்.

புதிய ரக கரோனா வைரஸ் பரவலைச் சீனா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்குப் பாராட்டு தெரிவித்த லீ சியன் லூங், சீனாவுடன் தொடர்பை வலுவாக்கி, உலகமயமாக்கக் காலத்தில் உலகைக் கூட்டாகக் கட்டியமைத்து, நீண்டகால மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டார்.