அமெரிக்காவில் கடுமையான மனித உரிமைப் பிரச்சினை
2021-09-15 11:23:34

செப்டம்பர் 14ஆம் நாள் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 48ஆவது கூட்டத்தொடரில், மனித உரிமை உயர் நிலை ஆணையர்களுடனான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், ஜெனிவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கான சீன நிரந்தர பிரதிநிதிக் குழுவைச் சேர்ந்த ஜியாங் துவன், ஒரு குழு நாடுகளின் சார்பாக, கூட்டறிக்கை ஒன்றை அளித்து, அமெரிக்காவிலுள்ள கடுமையான மனித உரிமை பிரச்சினையில் கவனம் செலுத்தினார்.

உலகின் மிக முன்னேறிய மருத்துவ வசதிகளையும் தொழில் நுட்பத்தையும் கொண்ட அமெரிக்கா, பொது மக்களின் உயிர் உரிமையிலும் ஆரோக்கிய உரிமையிலும் கவனம் செலுத்தாமல், உலகில் புதிய ரக கரோனா வைரஸால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் கொண்ட நாடாக மாறியுள்ளது என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், அமைப்புரீதியிலான தேசிய இனவாதமும், இனவெறி பாகுபாடும் அமெரிக்காவில் நீண்டகாலமாக உள்ளதாகக் குறிப்பிடும் அந்த அறிக்கையில்,  ஆப்பிரிக்கா மற்றும் ஆசியவம்சாவழியைச் சேர்ந்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய நிறுபான்மை மக்கள் அமெரிக்காவில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.