ஐ.நா பொது பேரவையில் ஷிச்சின்பிங் முக்கிய உரை
2021-09-22 10:36:18

ஐ.நா பொது பேரவையில் ஷிச்சின்பிங் முக்கிய உரை_fororder_xi

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொலி வழியாக ஐ.நா பேரவையின் 76ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் பங்கேற்று மனவுறுதியுடன் இன்னல்களைக் கூட்டாக சமாளித்து மேலும் அருமையான உலகத்தைக் கட்டியமைப்பது என்ற தலைப்பில் முக்கிய உரைநிகழ்த்தினார்.

இவ்வாண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவாகும். ஐ.நாவில் சீன மக்கள் குடியரசு மீண்டும் சட்டப்பூர்வமான இடம் திரும்பிப் பெற்ற 50ஆவது ஆண்டு நிறைவுமாகும். இந்த வரலாற்று நிகழ்வைச் சீனா கோலாகலமாகக் கொண்டாடவுள்ளது. மேலும் ஐ.நாவுடனான ஒத்துழைப்பைப் புதிய நிலைக்கு முன்னேற்றி ஐ.நாவின் மாபெரும் லட்சியத்துக்கு பெரிய பங்கு ஆற்ற விரும்புவதாக ஷிச்சின்பிங் தனது உரையில் குறிப்பிட்டார்.

உலகம், வரலாற்றின் முக்கிய தருணத்தில் மீண்டும் நிற்கிறது. நாங்கள் அனைவரும் மனவுறுதியுடன் உலகின் பொது அறைகூவல் மற்றும் அச்சுறுத்தல்களைக் கூட்டாக சமாளிக்க வேண்டும். மனிதரின் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றி மேலும் அருமையான உலகத்தைக் கூட்டாக கட்டியமைக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.