ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் முப்படைத் தளபதி குழுத் தலைவர்கள் கூட்டம்
2021-09-25 17:22:30

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் முப்படைத் தளபதிக் குழுத் தலைவர்கள் கூட்டம் 23ஆம் நாள் ரஷியாவில் நடைபெற்றது. சீன மத்திய ராணுவ ஆணையத்தின் உறுப்பினர் லீ ட்சோஷெங் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 20 ஆண்டுகளில், பிரதேச வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை விரைவுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றி வருகிறது என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போதைய சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை, பாதுகாப்புத் துறையில் எதிர்நோக்கும் அறைகூவல், ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

அமைதி கடமை எனும் பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டு ராணுவ பயிற்சியை அவர்கள் பார்வையிட்டனர்.