இந்தியாவி மகாராஷ்டிராவில் அக்டோபர் 4 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு
2021-09-25 16:52:13

இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் கோவிட் -19 பணிக்குழு மற்றும் மாநில சுகாதாரத் துறையின் ஒப்புதலைத் தொடர்ந்து அக்டோபர் 4 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கிராமப்புற மாணவர்களுக்கு 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் படிப்படியாகத் தொடங்கும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றாலும், மாணவர்கள் நேரடியாக வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. பெற்றோர்கள் ஒப்புதல் அவசியம் என்று அமைச்சர் கூறினார்.

மாநில கல்வித் துறையால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 70 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.