சீன தனிச்சிறப்புடைய நவீனமயமாக்க பாதை
2021-11-14 16:01:34

கிட்டத்தட்ட ஒரு திங்கள் காலத்துக்கு முன், 9ஆவது உலக சீனாவியல் கருத்தரங்கில், செர்பிய முன்னாள் அரசுத் தலைவர் பாவ்ரிஸ் தாடிச் கூறுகையில்,

நவீனமயமாக்கம் மேலை நாடுமயமாக்கமல்ல. சீனா நவீனமயமாக்கத்திற்கு புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது என்பதை 21ஆவது நூற்றாண்டில் மேலை நாடுகள் சந்தித்த அறைகூவல்கள் நிரூபித்துள்ளன.

காலனியாதிக்கம், போர், சர்ச்சை ஆகியவற்றை ஏற்படுத்தாத சீனத் தனிச்சிறப்புடைய நவீனமயமாக்கப் பாதை வெற்றி பெற்ற காரணம் என்ன? இது உலகிற்கு என்ன பங்காற்றியது ஆகியன குறித்து தாடிச் உள்ளிட்ட சர்வதேச புகழ்பெற்றவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, பொது மக்களுக்குத் தலைமை தாங்கி, சீனத் தனிச்சிறப்புடைய நவீனமயமாக்கப் பாதையை ஏற்படுத்தி, மனித நாகரிகத்தின் புதிய நிலைமையை உருவாக்கியுள்ளது. வளரும் நாடுகள் நவீனமயமாக்கப் பாதையை உருவாக்கும் வழிமுறையை அதிகரித்துள்ளது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மத்தியக் கமிட்டியின் 6ஆவது முழு அமர்வில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சீனத் தனிச்சிறப்புடைய நவீனமயமாக்கப் பாதை மேலதிகமான விவாதங்களையும் யோசனைகளையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.