துரோகச் செயலின் பின் விளைவை லிதுவேனியா தாங்கிக் கொள்ள வேண்டும்
2021-11-19 17:04:20

லிதுவேனிய அரசு, சீனாவின் உறுதியான எதிர்ப்பையும் பலமுறை கூறிய அறிவுரையையும் பொருட்படுத்தாமல், தைவான் அதிகார வட்டாரம் லிதுவேனியாவில் பிரதிநிதி அலுவலகத்தை அமைக்க அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. லிதுவேனியாவின் இம்மோசமான செயல், ஒரே சீனா என்ற கொள்கையை வெளிப்படையாக மீறி, சீனாவின் உள்விவகாரத்தில் கடுமையாகத் தலையிட்டு, இருநாட்டு தூதாண்மை உறவுக்கான அறிக்கையிலுள்ள தனது அரசியல் வாக்குறுதிக்குத் துரோகம் செய்துள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்கும் வகையில் இன்றியமையாத நடவடிக்கைகள் அனைத்தையும் சீனா மேற்கொள்ளும். இத்துரோகச் செயலின் அனைத்து பின் விளைவுகளையும் லிதுவேனியா தாங்கிக் கொள்ள வேண்டும்.

தைவான் விவகாரம் சீனாவின் மைய நலனுடன் தொடர்புடையது. லிதுவேனியாவின் செயல், இருகரைகள் ஒரே சீனாவைச் சேர்ந்தவை என்ற உண்மையை மாற்றாமல், இருகரைகள் ஒன்றிணையும் வரலாற்றுப் போக்கைத் தடுக்காமல், லிதுவேனியாவுக்கு பாதிப்பைக் கொண்டு வரும்.

ஒரே சீனா என்ற கொள்கை, சர்வதேசப் பொதுக் கருத்தாகும். மற்ற நாடுகளுடன் சீனா இருதரப்பு உறவை வளர்ப்பதற்கான அரசியல் அடிப்படையும் ஆகும். லிதுவேனியா தனது தவறான முடிவை உடனே திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், லிதுவேனியா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.