சீன-ஆசியான் பேச்சுவார்த்தை உறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவுக்கான உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் உரை
2021-11-22 14:46:47

சீன-ஆசியான் பேச்சுவார்த்தை உறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவுக்கான உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் உரை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் இருந்தவாறு, சீன-ஆசியான் பேச்சுவார்த்தை உறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவுக்கான காணொளி உச்சிமாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.

அவர் உரை நிகழ்த்துகையில், கடந்த 30 ஆண்டுகளாக, சீனாவும் ஆசியானும் அசாதாரண பயணத்தைக் கடந்து சென்று, இருதரப்பு உறவின் மாபெரும் வளர்ச்சியை நனவாக்கியுள்ளன. இருதரப்பும் பனிப்போரின் பாதிப்பிலிருந்து விலகி, பிராந்திய அமைதியைக் கூட்டாகப் பேணிக்காத்து, கிழக்காசிய பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டுக்குத் தலைமை தாங்கி, கூட்டு வளர்ச்சி மற்றும் செழுமையை மேம்படுத்தி, 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு மேலும் அருமையான வாழ்க்கையைக் கொண்டு வந்துள்ளன. சுமுகமான, நட்பார்ந்த, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறக் கூடிய பாதையை உருவாக்கி, மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றியுள்ளோம் என்று தெரிவித்தார்.

இன்று, சீன-ஆசியான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை உருவாக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தோம். இரு தரப்புறவின் வரலாற்றில் இது புதிய மைல் கல்லாகும். பிரதேசம் மற்றும் உலகின் அமைதி, நிதானம், செழுமை மற்றும் வளர்ச்சிக்கு இது புதிய இயக்கு ஆற்றலை வழங்கும் என்றும் முற்காலத்திலும், தற்காலத்திலும் எதிர்காலத்திலும் ஆசியானின் நல்ல அண்டை வீட்டுக்காரர், நல்ல நண்பர் மற்றும் நல்ல கூட்டாளியாக சீனா விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தின் சீன-ஆசியான் உறவு குறித்து அமைதியான தாயகம், நிதானமான தாயகம், செழிப்புடன் கூடிய தாயகம், அழகான தாயகம் மற்றும் நட்பார்ந்த தாயகத்தைக் கூட்டாக உருவாக்குதல் என்ற ஐந்து அம்ச யோசனையை முன்வைத்த ஷிச்சின்பிங், மேலும் நெருக்கமான சீன-ஆசியான் பொது சமூகத்தையும், மேலும் அருமையான பிரதேசம் மற்றும் உலகத்தையும் உருவாக்குவோம் என்றும் கூறினார்.