பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை நிறுவிய சீன-ஆசியான்
2021-11-23 10:10:20

சீனாவும் ஆசியானும் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை நிறுவின என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக 22ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சீன-ஆசியான் பேச்சுவாத்தை உறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவுக்கான உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.

கடந்த 30 ஆண்டுகளில் சீனாவும் ஆசியானும் எட்டியுள்ள சாதனைகளை ஷி ச்சின்பிங் மீளாய்வு செய்தார். ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்தல், ஒத்துழைப்பின் மூலம் நலன் பெறுதல், ஒன்றுக்கு ஒன்று உதவி அளித்தல், பரஸ்பர கற்றல் ஆகிய 4 துறைகளில் பெற்றுள்ள வெற்றிகரமான அனுபவங்களைத் தொகுத்தார்.

அமைதி இல்லாவிட்டால், எதுவும் கிடைக்காது என்ற சீனாவின் கருத்தில் வரலாற்றுப் பொருள் அடங்கி உள்ளது.

புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சீனாவும் ஆசியானும் ஒன்றுக்கு ஒன்று உதவி அளித்து வருகின்றன.

வளர்ச்சியில் கவனம் செலுத்துவது, இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய அனுபவமாகும்.

பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை நடைமுறைப்படுத்தினால், சீனாவும் ஆசியானும் மேலும் செழுமையான வளர்ச்சியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.