அறிவியல் தொழில் நுட்ப முறைமையின் சீர்திருத்தத்தை விரைவுபடுத்த வேண்டும்:ஷிச்சின்பிங்
2021-11-24 20:25:03

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சீர்திருத்தத்தை விரிவாக ஆழமாக்கும் ஆணையத்தின் 22ஆம் கூட்டம் 24ஆம் நாள் நடைபெற்றது. அதில் அறிவியல் தொழில் நுட்ப முறைமையின் சீர்திருத்தத்துக்கான 3 ஆண்டுகள் திட்டம், நாடளவில் ஒரே மின்சாரச் சந்தை முறைமையை உருவாக்கும் வழிகாட்டல் ஆலோசனைகள் உள்ளிட்ட சில ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் கூறுகையில், அறிவியல் தொழில் நுட்ப முறைமையில் சீர்திருத்தம் மேற்கொள்வதன் நோக்கம், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம் மற்றும் முன்னெச்சரிக்கை திறனை உயர்த்துவதாகும் என்றும், மின்சாரச் சந்தை இயங்கும் விதிகளின்படி, மேலும் பெருமளவில் மேம்பாடான  மின்சார விநியோகத்தைத் தூண்டி, திறந்த பாதுகாப்பான மின்சாரச் சந்தையை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.