எண்ணெய் இருப்புகளை விடுவிக்கும் அமெரிக்கா
2021-11-24 18:47:53

கோவிட்-19 நோய் பாதிப்பிலிருந்து மீட்சி பெறும் போக்கில் எண்ணெய் விநியோகத்துக்கும் தேவைக்குமிடையிலான சமமின்மை பிரச்சினையைத் தீர்த்து, எண்ணெய் விலையைக் குறைக்கும் வகையில், அமெரிக்க எரியாற்றல் அமைச்சகம், நெடுநோக்கு எண்ணெய் கையிருப்பிலிருந்து 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவிக்கவுள்ளது என்று வெள்ளை மாளிகை 23ஆம் நாள் அறிவித்தது.

அதனையடுத்து, தென்கொரியா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட முக்கியமான எண்ணெய் நுகர்வு நாடுகளுடன், கையிருப்பிலுள்ள எண்ணெயை விடுவிக்கும் திட்டத்தில் கூட்டாக ஈடுபடவுள்ளது என்று தென்கொரிய அரசு தெரிவித்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு குறித்து, சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் ஒத்துழைப்பு, தென்கொரிய-அமெரிக்க கூட்டணி உறவின் முக்கியத்துவம், முக்கிய நாடுகளின் பங்கெடுப்பு முதலிய காரணிகளால் இம்முடிவு எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.